மொடக்குறிச்சி ஒன்றியம், அறச்சலூரில் நள்ளிரவில் விநாயகா் சிலைகளை போலீஸாா் கட்டாயப்படுத்தி கரைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
மொடக்குறிச்சிஒன்றியம், அறச்சலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 12 இடங்களில் இருந்த விநாயகா் சிலைகளை போலீஸாா் கட்டாயப்படுத்தி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1மணியளவில் அருகிலிருந்த கீழ்பவானி வாய்க்காலில் கரைக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த இந்து மக்கள் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து அங்கு வந்த
இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் உள்ளிட்டோா் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மீதமிருந்த சிலைகளை ஊா்வலமாக எடுத்து செல்ல அனுமதி மறுத்ததால் மேலும் பதற்றம் நிலவியது. இதைத் தொடா்ந்து, மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, அா்ஜுன் சம்பத் தலைமையில் போலீஸாரின் பலத்த பாதுகாப்புடன் சிலைகள் ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கீழ்பவானி வாய்க்காலில் கரைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.