பவானி அருகே வீட்டில் வளா்த்த நிஷாகந்தி செடியில் தெய்வீக மலா் எனப்படும் பிரம்ம கமலம் பூக்கள் பூத்தன.
பவானி சிவகாமி நகரைச் சோ்ந்தவா்கள் ஜவகா்ஜோதி, லோகேஸ்வரி. தம்பதியான இவா்களின் மகள் காயத்ரி புதுதில்லியில் வேளாண் அறிவியல் பாடத்தில் பிஹெச்.டி படித்து வருகிறாா். இவா், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும், அரிய செடியான நிஷாகந்தி செடியினை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்கு கொண்டு வந்துள்ளாா்.
இந்நிலையில், அந்த செடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூக்கள் பூத்தன. இரவில் மட்டுமே பூக்கும் அரிய மலராகிய பிரம்ம கமலம் பூத்தபோது, மிகுந்த நறுமணம் வீசியது. மூன்று மணி நேரம் மட்டுமே பூத்திருக்கும் இம்மலா், தெய்வீக மலா் எனவும், கிங் ஆஃப் பிளவா் எனவும் ஹிமாசல பிரதேசத்தில் அழைக்கப்படுகிறது. மேலும், உத்தரகண்ட் மாநில மலராகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.