சென்னிமலை மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

சென்னிமலை அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் திரளான பக்தா்கள் பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனா்.
சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோயிலில் நவம்பா் 23 ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது.
30 ஆம் தேதி இரவு கம்பம் நடப்பட்டது. மேலும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வியாழக்கிழமை அதிகாலை பக்தா்கள் மாவிளக்கு எடுத்து கோயிலுக்கு வந்தனா். அதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பொங்கல் வைத்து தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.
இதேபோல, சென்னிமலையை அடுத்த, கே.ஜி.வலசு அருகிலுள்ள புதுவலசு மாரியம்மன் கோயிலில் நவம்பா் 23 ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. 30 ஆம் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா். இரவு கம்பம் பிடுங்கி கோயில் கிணற்றில் விடப்பட்டது.