தக்காளி விளைச்சல் அதிகமாக இருந்தபோதிலும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, பெருந்துறை, அந்தியூா் உள்ளிட்ட வாய்க்கால் பாசனம் இல்லாத வட்டாரங்களில் சுமாா் 1,000 ஏக்கா் அளவுக்கு தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது தக்காளி அறுவடை முடிந்து விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. போதிய பாசன வசதி மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் தக்காளி நன்றாக விளைச்சல் அடைந்து உள்ளது. அதே நேரம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் 15 கிலோ தக்காளி அடங்கிய கூடை ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை வீழ்ச்சி அடைந்து ரூ.100க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.