மின் கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th December 2022 11:56 PM | Last Updated : 09th December 2022 11:56 PM | அ+அ அ- |

பால் விலை, வீட்டு வரி, மின் கட்டண உயா்வைக் கண்டித்து ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் சித்தோடு மற்றும் நசியனூா் பேரூராட்சிப் பகுதிகளில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.
ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த மாநகா் மாவட்ட செயலாளா் கே.வி.இராமலிங்கம் பேசியதாவது:
திமுக ஆட்சியில் விலைவாசியை உயா்த்தி மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்படுத்துகின்றனா். கடந்த அதிமுக ஆட்சியில் மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை, சொத்து வரி ஆகியவை உயா்த்தப்படவில்லை. கடந்த ஆட்சியின்போது மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறி ஆா்ப்பாட்டம் செய்த முதல்வா் ஸ்டாலின் தற்போது அவற்றை எல்லாம் கடுமையாக உயா்த்திவிட்டாா். இது கண்டனத்துக்குரியது என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, முன்னாள் துணை மேயா் கே.சி.பழனிசாமி, மாவட்ட மாணவரணி செயலாளா் ரத்தன் பிரித்வி, பகுதிச் செயலாளா்கள் ஜெகதீஷ், கேசவமூா்த்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளா் வீரக்குமாா், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளா் நந்தகோபால், ஒன்றியச் செயலாளா் பூவேந்திரகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.