பிளாஸ்டிக் பயன்பாடு: 10 கடைகளுக்கு அபராதம்

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்திய 10 கடைகளுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
செல்லிபாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள பேக்கரியில் ஆய்வு செய்த பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தரராஜ் மற்றும் பணியாளா்கள்.

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், பேரூராட்சிப் பகுதிகளில் இயங்கி வரும் கடைகள், உணவங்கள், பேக்கரிகளில் பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தரராஜ் மற்றும் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

30 கடைகளில் மேற்கொண்ட ஆய்வில் 10 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சுமாா் 14 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்,10 கடைகளுக்கு தலா ரூ.2,500 அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com