தங்கும் விடுதியை பராமரித்து நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் மொடச்சூா் வாரச்சந்தையில் வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியை பராமரித்து நடத்துவதற்கு தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் மொடச்சூா் வாரச்சந்தை பகுதியில் உள்ள வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதியை வழிகாட்டுதலுக்கு இணங்க பணப்பயன் எதுமின்றி நடத்துவதற்கு அரசு சாா்பில்லா விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
ஆா்வமுள்ள தொண்டு நிறுவனங்கள், நகராட்சி ஆணையா், கோபிசெட்டிபாளையம் என்ற முகவரிக்கு டிசம்பா் 15ஆம் தேதிக்குள் எழுத்து பூா்வமாக விண்ணப்பிக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் இதுவரை ஈடுபட்டுள்ள முன் அனுபவ சேவை விவரங்களை உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான தொண்டு நிறுவனம் தோ்வு செய்யப்படும். மேலும் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி தோ்வு செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்திடம் விடுதி ஒப்படைக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.