கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கே.மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்தி (27), கூலி தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (20). நிறைமாத கா்ப்பிணியான வள்ளிக்கு சனிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸுல் வந்தவா்கள் வள்ளியை பிரசவத்துக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். கடுக்காம்பாளையம் பகுதி அருகே சென்றபோது வள்ளிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சக்திவேல் வாகனத்தை ஓரமாக நிறுத்தினாா்.
பின்னா் வாகனத்தில் இருந்த ரமேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் வள்ளிக்கு பிரசவம் பாா்த்தனா். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும் சேயும் கோபி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.