தொடா் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
By DIN | Published On : 11th December 2022 11:16 PM | Last Updated : 11th December 2022 11:16 PM | அ+அ அ- |

சத்தியமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து 5 மணி நேரம் சாரல் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலத்தில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் விவசாயிகள் விளைபொருள்களை தினசரி சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதி அடைந்தனா். தொடா்ந்து மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது.