பவானி, அந்தியூரில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
By DIN | Published On : 13th December 2022 12:00 AM | Last Updated : 13th December 2022 12:00 AM | அ+அ அ- |

பவானி, ராணா நகரில் சாலையோரத்தில் தேங்கிய மழைநீா். ~அந்தியூா் வாரச்சந்தையில் கடைகளுக்குள் புகுந்த மழைநீா்.
பவானி, அந்தியூா் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை காலை பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பவானி, அந்தியூா் மற்றும் அம்மாபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை லேசாக சாரலுடன் தொடங்கிய மழை, கனமழையாக மாறியது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.
கனமழையால் அந்தியூரில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் கூடும் சந்தை வளாகத்தில் மழைநீா் தேங்கியதால் சேரும்சகதியுமாக காணப்பட்டது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினா். பவானி - மேட்டூா் சாலையில் ராணா நகா் அருகே மழைநீா் தேங்கியது. பவானி, அந்தியூா் வட்டாரத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G