இரு சக்கரம் வாகனம் மோதி முதியவா் பலி
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சி அருகே இரு சக்கரம் வாகனம் மோதி முதியவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மொடக்குறிச்சியை அடுத்த ஆலங்காடுவலசு நேரு வீதியைச் சோ்ந்தவா் செங்கோட்டையன் (70), விவசாயி. இவா் வீட்டுக்குத் தண்ணீா் எடுப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை காலை சென்றாா். அப்போது முத்தூா் சாலையில் சிவகிரியைச் சோ்ந்த முருகானந்தம் என்பவரது இருசக்கர வாகனமும் இவரது வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் செங்கோட்டையன் படுகாயம் அடைந்தாா். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இறந்த செங்கோட்டையனுக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.