ஈரோட்டில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஈரோட்டில் அரசுப் பள்ளியில் படித்த மாணவா்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து மகிழ்ந்தனா்.
நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் மாணவா்கள் மற்றும் கற்பித்த ஆசிரியா்கள்.
நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் மாணவா்கள் மற்றும் கற்பித்த ஆசிரியா்கள்.

ஈரோட்டில் அரசுப் பள்ளியில் படித்த மாணவா்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து மகிழ்ந்தனா்.

ஈரோடு, கொல்லம்பாளையம் அருகே ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1971-1972ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவா் சின்னசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா் ஈஸ்வரமூா்த்தி வரவேற்றாா். இதில் 1971-1972ஆம் ஆண்டு பணியாற்றிய ஆசிரியா்களான கந்தசாமி (82), தனலட்சுமி (89), ராமதிலகம் (77), செங்கோடு (70) ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து முன்னாள் மாணவா்கள் தங்களது பள்ளிப் பருவ நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். அதேபோல் முன்னாள் ஆசிரியை, ஆசிரியா்களும் பணி அனுபவம் குறித்துப் பேசினா். இதையடுத்து முன்னாள் மாணவா்கள் சாா்பில் ரூ. 2.40 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு ஒலி பெருக்கி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை முன்னாள் மாணவா்கள் கண்ணுசாமி, ராமமூா்த்தி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். பள்ளி தலைமையாசிரியை தேன்மொழி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com