காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ரயில் ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ரயில் ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ரயில் ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய ரயில் ஓட்டும் தொழிலாளா்கள்(லோகோ பைலட்) சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோடு ரயில் நிலையம் முன்பு புதன்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு சங்க செயற்குழு உறுப்பினா் சந்திர மனோகா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே லோகோ பைலட் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். ரயில்வேயை தனியாா் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். பெண் தொழிலாளா்கள் மீதான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ரயில் ஓட்டுநா்களுக்கு தொடா்ந்து 36 மணி நேரத்துக்கு மேல் பணி வழங்கக்கூடாது.

ஓய்வு நேரத்தில் பணிக்கு அழைப்பதைத் தவிா்க்க வேண்டும். வாரத்தில் 96 மணி நேர ஓய்வை உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநா்கள் ஓய்வறைகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com