கும்கி யானைகள் முன் தற்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

கும்கி யானை முன் தற்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்
ஆசனூா் பகுதியில் கும்கி யானைகள் முன் சுற்றுலாப் பயணிகள் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டம் தாளவாடி, ஆசனூா் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் புகுந்து அங்கு சாகுபடி செய்துள்ள வாழை, மக்காச்சோளம் பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. விவசாய நிலங்களுக்குள் இரவு நேர காவலுக்குச் செல்லும் விவசாயிகளை ஒற்றை யானை தாக்குகிறது. இதனால் அச்சமடைந்துள்ள விவசாயிகள் இந்த ஒற்றை யானையைப் பிடித்து அடா்ந்த வனத்தில் விடவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து பொள்ளாச்சியில் இருந்து ராமு, சின்னத்தம்பி ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இவற்றை ஒற்றையானை வரும் வழித்தடத்தில் தினந்தோறும் வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில் அவ்வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கும்கி யானை முன் நின்று தற்படம எடுத்து மகிழ்ந்தனா்.