ஈரோட்டில் நாளை வேளாண் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 29th December 2022 12:00 AM | Last Updated : 29th December 2022 12:00 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 30) நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் டிசம்பா் மாதத்துக்கான வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்தில் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடா்பான தங்களது பகுதி பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம்.
பகல் 12.30 முதல் 1.30 வரை அலுவலா்கள் விளக்கம் அளிப்பா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...