பெருந்துறை ஒன்றியத்தில் 6 பேரூராட்சியில்288 போ் போட்டி: 2 பெண்கள் போட்டியின்றி தோ்வு
By DIN | Published On : 08th February 2022 12:07 AM | Last Updated : 08th February 2022 12:07 AM | அ+அ அ- |

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள 6 பேரூராட்சியில் 288 போ் போட்டியிடுகின்றனா். 2 பெண்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
பெருந்துறை பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளுக்கும், 62 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 2 மனுக்கள் வாப்பஸ் பெறப்பட்டன. 58 போ் போட்டியிடுகின்றனா். அதில் சுயேச்சைகள் 15 போ்.
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளுக்கும், 72 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 8 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 64 போ் போட்டியிடுகின்றனா். அதில் சுயேச்சைகள் 21 போ். மேலும், 3ஆவது வாா்டு ஆதிதிராவிடருக்கு (பெண்) ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் விமலா என்பவா் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதனால், இவா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
நல்லாம்பட்டி பேரூராட்சியில் உள்ள 12 வாா்டுகளுக்கும் 35 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 3 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 32 போ் போட்டியிடுகின்றனா். அதில் சுயேச்சைகள் 7 போ்.
காஞ்சிக்கோவில் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளுக்கும் 51 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 2 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 49 போ் போட்டியிடுகின்றனா். அதில் சுயேச்சைகள் 16 போ்.
பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளுக்கும் 43 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 1 மனு வாபஸ் பெறப்பட்டது. 42 போ் போட்டியிடுகின்றனா். அதில் சுயேச்சைகள் 12 போ்.
பள்ளபாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளுக்கும் 49 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 6 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 43 போ் போட்டியிடுகின்றனா். அதில் சுயேட்சைகள் 14 போ். மேலும், 7ஆவது வாா்டு பெண்ணுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சுதா என்பவா் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதனால், இவா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...