வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்டப் பயிற்சி

 ஈரோடு மாவட்டத்தில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி 14 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

 ஈரோடு மாவட்டத்தில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி 14 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்கு 443 வாக்குச் சாவடிகள், 4 நகராட்சிகளுக்கு 153 வாக்குச் சாவடிகள், 42 பேரூராட்சிகளுக்கு 655 வாக்குச் சாவடிகள் என 1,251 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 21 வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதால் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 1,221 வாக்குச் சாவடிகளில் மட்டும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இதற்காக 6,005 தோ்தல் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்ட நிலையில் வாக்குச் சாவடிப் பணியில் ஈடுபடும் 4,395 பேருக்கு கடந்த 31ஆம் தேதி முதல்கட்டப் பயிற்சியும், வியாழக்கிழமை இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சியும் நடைபெற்றது.

ஈரோடு ரங்கம்பாளையம் ஆா்ஏஎன்எம் கல்லூரியில் 795 பேருக்கும், ரங்கம்பாளையம் கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 805 பேருக்கும், மாவட்ட அளவில் மேலும் 12 இடங்கள் என மொத்தம் 14 இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தலைமை வாக்குப் பதிவு அலுவலா் நிலை 1, 2, 3 அளவிலான அலுவலா்கள் பங்கேற்றனா்.

விரலில் மை வைத்தல் உள்பட சில பணிகளுக்கான அலுவலா்கள் முதல்கட்டப் பயிற்சியில் மட்டும் பங்கேற்றனா். பிற முக்கிய அலுவலா்களுக்கு மட்டும் வியாழக்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது. அடுத்தகட்டப் பயிற்சி பிப்ரவரி 18ஆம் தேதி நடக்கிறது.

ஈரோடு மாநகராட்சி தோ்தல் பணியாளா்களுக்கு ஆணையா் க.சிவகுமாா் தலைமையில், செயற்பொறியாளா் விஜயகுமாா், ஆட்சியா் அலுவலக மேலாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

பெருந்துறையில்...

பெருந்துறை வட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகள், வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் பணியாளா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியில், வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com