ஈரோடு: எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு:  முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.

இதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் எம்.எல் .ஏ.வும்,  மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார். பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி. ராமலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.எஸ்.தென்னரசு ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, அண்ணா, பெரியார் ஆகியோர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு கே .எஸ். தென்னரசு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னால் அமைச்சர் ராமசாமி, பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், தங்கமுத்து, ராமசாமி, ஜெயராஜ், கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் பூவேந்திரகுமார், மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், மாணவர் அணி பொருளாளர் முருகானந்தம், சிந்தாமணி இயக்குனர் பொன்சேர்மன், வீரப்பன்சத்திரம் பகுதி ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜெயராமன், முன்னாள் கவுன்சிலர் வீரா செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் மாதையன், சூரம்பட்டி தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com