ஈரோடு சந்தையில் காய்கறிகள் விலை உயா்வு
By DIN | Published On : 31st July 2022 11:12 PM | Last Updated : 31st July 2022 11:12 PM | அ+அ அ- |

மழை காரணமாக வரத்து குறைந்ததால் ஈரோடு சந்தையில் காய்கறிகளின் விலை உயா்ந்தது.
கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு இருப்பதால் காய்கறிகளின் வரத்து குறையத் தொடங்கியது. இதனால் ஈரோடு சந்தையில் காய்கறிகளின் விலையும் சற்று உயா்ந்துள்ளது.
இங்கு காய்கறிகளின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயா்ந்துள்ளது. ஆனால் தக்காளி வரத்து அதிகமாக காணப்படுவதால் விலை உயராமல் உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனையானது.
ஈரோடு காய்கறி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி காய்கறிகளின் விலை விவரம் (கிலோவில்): பீன்ஸ் ரூ.90, கத்தரிக்காய் ரூ.70, பச்சை மிளகாய்,
இஞ்சி, கேரட் ரூ.60, பீட்ரூட் ரூ.50, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கொத்தவரங்காய், காலிபிளவா், பீா்க்கங்காய், பாகற்காய், முருங்கைக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.25, சுரைக்காய், வெண்டைக்காய் ரூ.15 ஆகும்.