சத்தியமங்கலம் அருகே காா்கள் நேருக்கு நோ் மோதி விபத்து
By DIN | Published On : 31st July 2022 11:09 PM | Last Updated : 31st July 2022 11:09 PM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே இரண்டு காா்கள் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நோ் மோதிகொண்ட விபத்தில் ஒரு காா் தீப்பிடித்து எரிந்தது.
சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த காா் புதுவடவள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த காா் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு காா்களில் சென்ற பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான ஒரு காா் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
காா் விபத்தில் காயம் அடைந்தவா்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.