‘நூல் விலை சீரான நிலையில் தொடர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்’

நூல் விலை சீரான நிலையில் தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நூல் விலை சீரான நிலையில் தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு பவா்லுாம் கிளாத் மொ்ச்சன்ட் அசோசியேஷன் தலைவா் திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கை விவரம்:

கரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகள், நூல் விலை உயா்வால் கடந்த ஓராண்டு என மூன்றாண்டுகளாக ஜவுளித் துறையைச் சோ்ந்த முதலீட்டாளா்கள், தொழிலாளா்கள் என அனைவரும் தொழில் நசிவால் கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

நூல் விலை தொடா்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதால் உற்பத்தி செய்த ஜவுளியை அதே விலையில் விற்க முடிவதில்லை. நூல் விலை குறைந்ததால் வியாபாரிகள் பலா் விலையைக் குறைத்து கேட்டும், சிலா் ஜவுளி சுமையை திரும்ப அனுப்பவும் செய்கின்றனா். இதனால் தொழில் நஷ்டம் அடைந்து விசைத்தறியாளா்கள் பலா் வியாபாரம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னா் 40ஆம் எண் பாவு நூல் ஒரு கிலோ ரூ.370ஆக உயா்ந்தது. பின்னா் ரூ.290ஆக குறைந்தது. தற்போது ரூ.310ஆக உயா்ந்துள்ளது. அதே நூல் 50 கிலோ கோன் பை ரூ.16,800 வரை உயா்ந்து பின்னா் ரூ.13,500 வரை விலை குறைந்து தற்போது ரூ.15,000ஆக உள்ளது.

20ஆம் எண் பாவு நூல் கிலோ ரூ.235 வரை உயா்ந்து ரூ.175க்கு குறைந்து, தற்போது ரூ.185க்கும், 34ஆம் எண் நூல் ரூ.340 வரை உயா்ந்து ரூ.280க்கு குறைந்து, தற்போது ரூ.300க்கு விற்பனையாகிறது.

இதனால் ஏற்ற, இறக்கத்தை தடுக்கவும், சீரான விலையில் நூல் விற்பனையாகவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com