பெருந்துறையில் ரூ.2.04 கோடிக்கு கொப்பரை ஏலம்
By DIN | Published On : 31st July 2022 12:31 AM | Last Updated : 31st July 2022 12:31 AM | அ+அ அ- |

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.2.04 கோடிக்கு கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 5,116 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இவற்றின் எடை 2, 51,000 கிலோ.
இதில், முதல் தரக் கொப்பரை அதிகபட்சமாக, ரூ. 85.20க்கும், குறைந்தபட்சமாக ரூ.80.10க்கும், விற்பனையாயின.
இரண்டாம் தரக் கொப்பரை அதிகபட்சமாக ரூ.82.15க்கும், குறைந்தபட்சமாக ரூ.63க்கும் விற்பனையாயின.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.04 கோடி என விற்பனைச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனா்.