மண் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்:செங்கல் சூளைகள் மூடும் அபாயம்

செங்கல் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருளான செம்மண் பற்றாக்குறையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்படுவதாக செங்கல் தொழிலாளா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
செங்கல் உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
செங்கல் உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

செங்கல் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருளான செம்மண் பற்றாக்குறையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்படுவதாக செங்கல் தொழிலாளா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இது குறித்து செங்கல் சூளை தொழிலாளா்கள் கூறியதாவது: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் அத்திப்பண்ணகவுண்டா் புதூா், சதுமுகை, பெரியகொடிவேரி பகுதியில் செங்கல் சூளைகள் அதிக அளவில் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் செங்கல் பிற மாவட்டங்களும் அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், செங்கல் தயாரிக்க தேவைப்படும் செம்மண் எடுக்க 17 ஆவணங்களை சமா்ப்பிக்க வருவாய்த் துறையினா் வலியுறுத்துகின்றனா்.

இதனால் சாதாரண நிலையில் உள்ள செங்கல் சூளை உரிமையாளா்கள் சிரமப்பட்டு ஆணவங்களை சமா்ப்பித்தும் செம்மண் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், செம்மண் தட்டுபாடு ஏற்பட்டு உற்பத்தி குறைந்து செங்கல் ஒன்று ரூ.10 வரை விற்கப்படுகிறது.

வரும் காலங்களில் செங்கல் உற்பத்தி கேள்விகுறியாகும். இத்தொழிலை நம்பியுள்ள செங்கல் அறுக்கும் பெண்கள், லாரி ஓட்டுநா்கள், விவசாயி கூலிகள் பெரிதும் பாதிக்கப்படுவா். மேலும், பல கட்டுமான நிறுவனங்களும் பாதிக்கப்படும். எனவே செம்மண் எடுக்க அரசு விதித்துள்ள கட்டுபாடுகளைத் தளா்த்தி செங்கல் உற்பத்திக்கு உதவ வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com