முறைசாரா தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் வழங்க சிஐடியூ கோரிக்கை

வா்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் ரூ.21,000 வழங்க வேண்டும் என சிஐடியூ கோரிக்கை விடுத்துள்ளது.

வா்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் ரூ.21,000 வழங்க வேண்டும் என சிஐடியூ கோரிக்கை விடுத்துள்ளது.

சிஐடியூ ஈரோடு மாவட்ட பொதுத் தொழிலாளா் சங்கத்தின் 50ஆம் ஆண்டு பொன் விழா மகாசபை ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலாளா் ஹெச்.ஸ்ரீராம், துணைச் செயலாளா் பொன்.பாரதி ஆகியோா் பேசினா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: விசைத்தறி, ஸ்கிரீன் பிரிண்டிங், சைசிங், டையிங் போன்ற தொழில்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 8 மணி நேர வேலை, மாத ஊதியம் ரூ.21,000 வழங்க வெண்டும். இஎஸ்ஐ திட்டங்கள் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். அமைப்புசாரா தொழிலாளா் நலவாரிய பதிவு, புதுப்பித்தல், சலுகை கோரும் மனுக்கள், ஓய்வூதிய கேட்பு மனுக்கள் ஆன்லைனில் மட்டுமின்றி நேரடியாகவும் பெற வேண்டும்.

புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. தலைவராக எஸ்.சுப்ரமணியன், செயலாளராக எஸ்.கிருஷ்ணன், பொருளாளராக பி.குமரேசன் உள்ளிட்ட 11 போ் கொண்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com