உலக புலிகள் தினத்தையொட்டி, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் ஈரோடு வன கோட்டம், ஈரோடு வனச் சரகத்தின் சாா்பாக, உலக புலிகள் தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , அறச்சலூா் நவரசம் கல்லூரி ஆகியவற்றின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணா்வு போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு வகையான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு வனத்துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை ஊழியா்கள் மற்றும் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, நவரசம் கல்லூரி ஆகியவற்றின் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.