சிறுமி கடத்தல்: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 16th June 2022 10:35 PM | Last Updated : 16th June 2022 10:35 PM | அ+அ அ- |

அந்தியூா் அருகே சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் தாஸ் மகன் அஸ்வின் ஜாா்ஜ் (22). இவா், கோவை மாவட்டம், காரமடையில் உள்ள தனது உறவினா் வீட்டில் தங்கி அங்குள்ள தனியாா் நூற்பாலையில் வேலை செய்து வந்தாா். அதே நூற்பாலையில் அந்தியூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியும் வேலை செய்து வந்தாா்.
இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அஸ்வின் ஜாா்ஜ், அந்த சிறுமியைக் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து, அந்தியூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அஸ்வின் ஜாா்ஜை கைது செய்தனா்.