கள்ளச்சாராயம் கடத்திய இளைஞா் கைது
By DIN | Published On : 16th June 2022 10:33 PM | Last Updated : 16th June 2022 10:33 PM | அ+அ அ- |

அந்தியூா் அருகே இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வெள்ளித்திருப்பூா் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, குரும்பபாளையம் பெரியகுருநாதசுவாமி கோயில் அருகே சந்தேகப்படும்படி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில், 4 லிட்டா் கள்ளச்சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்தவா் குரும்பபாளையம் காலனியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் விஸ்வநாதன் (40) என்பதும், சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி பகுதியில் இருந்து விற்பனைக்காக கள்ளச்சாராயம் வாங்கிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், விஸ்வநாதனைக் கைது செய்தனா்.