குப்பைகளைச் சேகரிக்க பேட்டரி வாகனங்கள்
By DIN | Published On : 26th June 2022 11:45 PM | Last Updated : 26th June 2022 11:45 PM | அ+அ அ- |

வாகன பயன்பாட்டை தொடங்கிவைக்கிறாா் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம்.
அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், சங்கராபாளையம் ஊராட்சிப் பகுதியில் குப்பைகளைச் சேகரிக்க 14 மற்றும் 15-ஆவது நிதிக் குழு மானியம், திட மற்றும் திரவக் கழிவுகள் திட்டத்தின்கீழ் ரூ.4 லட்சம் மதிப்பில் இரண்டு பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன.
இதனை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஊராட்சித் தலைவா் குருசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் பேட்டரி வாகனங்களை இயக்கிவைத்தாா்.
இதில், சங்கராபாளையம் ஊராட்சி திமுக முன்னாள் செயலாளா் கவின் பிரசாத், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் வைத்தீஸ்வரன் மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.