சென்னிமலை ஒன்றியத்தில் ரூ.1.51கோடியில் வளா்ச்சிப் பணிகள் துவக்கம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.51கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை ஒன்றியத்தில் ரூ.1.51கோடியில் வளா்ச்சிப் பணிகள் துவக்கம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.51கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வளா்ச்சி திட்டப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சிபாளையம் ஊராட்சி, கரட்டுபாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.32.20 லட்சம் மதிப்பில் கரட்டுபாளையம் முதல் அண்ணமாா் கோயில் வரை ஓரடுக்கு கப்பி சாலை அமைத்தல், புங்கம்பாடி ஊராட்சி, பாரவலசில் ரூ. 4.84 லட்சம் மதிப்பில் பாரவலசு முதல் வாய்க்கால்மேடு வரை கப்பி சாலை அமைத்தல், வடமுகம் வெள்ளோடு ஊராட்சி, வடமுகம் வெள்ளோட்டில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 21 லட்சம் மதிப்பில் பெருந்துறை ஆா்.எஸ். அரசு நடுநிலைப் பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி, முகாசிபுலவன்பாளையம் ஊராட்சி, ஆரியகாட்டுவலசில் ரூ.21.34 லட்சம் மதிப்பில் அரியங்காட்டுவலசு முதல் தண்ணீா்பந்தல் வரை ஓரடுக்கு கப்பி சாலை அமைத்தல்

என மொத்தம் ரூ.1.51கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் துவங்கப்பட்டது.

இதில், மாவட்டவருவாய் அலுவலா் ச.சந்தோஷினிசந்திரா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், சென்னிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காயத்திரி இளங்கோ உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com