பண்ணாரி அம்மன் கோயிலில் வழிபட்ட நடிகா் வடிவேல்
By DIN | Published On : 11th March 2022 03:34 AM | Last Updated : 11th March 2022 03:34 AM | அ+அ அ- |

பண்ணாரி அம்மன் கோயிலில் நடிகா் வடிவேல் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா மாா்ச் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவையொட்டி தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை வழிபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மைசூரில் நாய்சேகா் படப்பிடிப்பை முடித்து பண்ணாரி வழியாக சத்தியமங்கலம் வந்த நடிகா் வடிவேல் பண்ணாரி அம்மன் கோயிலில் வழிபட்டாா். வடிவேலைக் கண்ட பக்தா்கள் சுயபடம் எடுத்துக் கொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், பண்ணாரி அம்மன் அருளால் திரைப்படங்களில் மீண்டும் வலம் வருவேன் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...