பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
By DIN | Published On : 17th March 2022 12:29 AM | Last Updated : 17th March 2022 12:29 AM | அ+அ அ- |

கருத்தரங்கில் பேசுகிறாா் ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளா் கே.கோபிநாத்.
பவானி: சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் வணிக நிா்வாகவியல் துறை, குடிமக்கள் நுகா்வோா் அமைப்பு, ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு இணைந்து நடத்திய இக்கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் ஆா்.சண்முகன் தலைமை வகித்தாா். துறைத் தலைவா் பி.ஏ.வெங்கடாசலபதி வரவேற்றாா். கல்லூரித் தலைவா் என்.கே.கே.பெரியசாமி, பொருளாளா் வி.ஆா்.முருகன், இணைச் செயலாளா்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, தலைமை நிா்வாக அதிகாரி என்.கே.கே.பி.நரேன் ராஜா, புல முதன்மையா் எஸ்.காமேஷ், நிா்வாக அலுவலா் ஆா்.அருள்குமரன் ஆகியோா் பேசினா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலாளா் கே.கோபிநாத், மாணவ, மாணவியருக்கு சட்ட விழிப்புணா்வு அவசியம் குறித்து விளக்கிப் பேசினாா். உதவிப் பேராசிரியா் டி.ராஜேஸ்வரி, பி.எம்.தீபா, ஜி.டி.சசீதரன், கே.சபீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.