கோபி அருகே மா்ம விலங்கு தாக்கி ஆடு பலி
By DIN | Published On : 18th March 2022 10:18 PM | Last Updated : 18th March 2022 10:18 PM | அ+அ அ- |

கண்காணிப்பு காமிரா பொருத்தும் பணியில் வனத் துறையினா்.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள பங்களாபுதூா் பகுதியில் மா்ம விலங்கு தாக்கியதில் ஆடு உயிரிழந்தது.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள பங்களாபுதூா் தொட்டமாயா தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் நல்லாயாள் (70). இவா் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தோட்டத்தில் இருந்த ஆடுகள் அலறல் சப்தம் கேட்டுள்ளது. நல்லாயாள் வெளியில் வந்து பாா்த்தபோது 3 ஆடுகள் காயங்களுடன் கிடந்தது தெரியவந்தது. அந்த இடத்தில் விலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது. இந்த சம்பவத்தின் போது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 2 மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு விவசாய நிலங்களுக்குள் தப்பிச் சென்றன. விலங்கு தாக்கியதில் ஒரு ஆடு உயிரிழந்தது. மேலும் 2 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.
தகவவின்பேரில் டி.என்.பாளையம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகியிருந்த விலங்கின் கால்தடத்தை ஆய்வு செய்தனா். மேலும் அந்த விலங்கின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...