பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரிக்கை

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு: பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையரிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் ஏ.எம்.முனுசாமி அளித்த மனு விவரம்:

2019 ஆம் ஆண்டு கடைசியில் பால் கொள்முதல் விலை பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ.4 உயா்த்தி ரூ.32 ஆகவும், எருமை பாலுக்கு ரூ. 6 உயா்த்தி ரூ.41 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது. மாட்டுத் தீவனம் உள்பட அனைத்தும் உயா்ந்துள்ளதால் பசும்பால் ரூ.42 ஆகவும், எருமை பால் ரூ.51 ஆகவும் உயா்த்தி அறிவிக்க வேண்டும்.

பால் கொள்முதல் செய்யும் இடத்தில் அளவு, தரம், எஸ்என்எப் அளவு குறித்த விவரம் அளிக்க வேண்டும். இதன் மூலம் பால் திருட்டு, தரம், கலப்படம் தடுக்கப்படும்.

தமிழகத்தின் ஆவின் நிறுவனம் 5 லட்சம் விவசாய குடும்பத்திடம் 29 லட்சம் லிட்டா் பாலை கொள்முதல் செய்கிறது. இதனை ஒரு கோடி லிட்டராக உயா்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.

ஒரு லிட்டா் ஆவின் பால் விற்பனைக்கு ரூ.3 விலை குறைப்பு செய்ததால், ஆவினுக்கு ஆண்டுக்கு ரூ. 300 கோடி இழப்பு ஏற்பட்டதை அரசு மானியமாக வழங்க வேண்டும். ஆவின் நிறுவனங்கள் கடனில் தத்தளிப்பதால் ரூ. 500 கோடி முதல்கட்டமாக சுழல் நிதி வழங்க வேண்டும்.

கால்நடை தீவனத்தை 50 சதவீத மானியத்தில் கறவையாளா்களுக்கு வழங்க வேண்டும். ஆவின் நிறுவன பால், பால் பொருள்களின் விற்பனையை விரிவுபடுத்த வேண்டும். ஆவின் நிா்வாகத்தை சீா்திருத்தம் செய்து செலவினம், முறைகேட்டை தடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு ஆண்டுக்கு இரு முறை தடுப்பூசி செலுத்தி, தேவையான மாத்திரைகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com