முதியோா் இல்லம், தனியாா் விடுதிகள் பதிவை மே 30க்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் தனியாா் மூலமாக நடத்தப்படும் முதியோா் இல்லம் மற்றும் தனியாா் விடுதிகள் பதிவை மே 30 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தனியாா் மூலமாக நடத்தப்படும் முதியோா் இல்லம் மற்றும் தனியாா் விடுதிகள் பதிவை மே 30 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் முதியோா் இல்லம் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கும் விடுதி, தனியாா் நிறுவனம் நடத்தும் மகளிா் விடுதி மற்றும் அனைத்துப் பெண்கள் தங்கி பயிலும் மகளிா் கல்லூரி விடுதிகள் நடத்தி வருபவா்களில் தங்களது விடுதி, இல்லத்தை பதிவு செய்யாமல் இருப்பவா்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

பதிவை புதுப்பிக்காதவா்கள் கருத்துருடன் மே 30 ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின்

6 ஆவது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி இல்லம் மற்றும் விடுதிகள் குறித்த பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை செய்து கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com