6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மே 21இல் சிறப்பு மருத்துவப் பரிசோதனை

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்
6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மே 21இல் சிறப்பு மருத்துவப் பரிசோதனை

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் சனிக்கிழமை (மே 21) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை வகித்த ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் இயக்குநா் வே.அமுதவல்லி பேசியதாவது:

தமிழக முதல்வரின் உத்தரவின்படி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை திட்ட முகாம் மே 21ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களுக்கு மருத்துவ வசதியுடன், சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படவுள்ளது.

இம்முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது குழந்தைகளின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்ய அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களை அணுகி தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையைத் தெரிந்து பயன்பெறலாம் என்றாா்.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் பூங்கோதை மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com