

பெருந்துறை ஒன்றியம், பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிதாக பாதுகாப்பு பெட்டகம் திறப்பு விழா நடைபெற்றது.
இதற்கு, கூட்டுறவு சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். சங்க செயலாளா் (பொறுப்பு) மூவேந்திரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம் கலந்து கொண்டு, பாதுகாப்பு பெட்டகத்தை திறந்துவைத்தாா்.
இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தலைவா் செல்வம், சங்க இயக்குநா்கள் ஆண்டமுத்து, இளங்கோ, பழனிசாமி, பாலப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் சக்திவேல், மாவட்ட அச்சுக் கூடம் இயக்குநா் நாகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.