பாட்மிண்டன் போட்டி: தி நவரசம் அகாதெமி பள்ளி மாணவி முதலிடம்
By DIN | Published On : 18th October 2022 11:38 PM | Last Updated : 18th October 2022 11:38 PM | அ+அ அ- |

பாட்மிண்டன் மற்றும் நடன போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுடன் பள்ளி நிா்வாகத்தினா்.
மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியில் அறச்சலூா் தி நவரசம் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி மாணவி முதலிடம் பிடித்தாா்.
ஈரோடு மாவட்டம், கோபி கலை, அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டி அண்மையில் நடைபெற்றது. 10 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவில் அறச்சலூா் தி நவரசம் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் எம்.பெளசியா வெற்றி பெற்று முதலிடம் பிடித்தாா்.
மேலும் ஈரோடு சகோதயா அமைப்பு சாா்பில் ஈரோடு இந்தியன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நடனப் போட்டியில் இப்பள்ளி மாணவியா் குழு மூன்றாமிடம் பிடித்தனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளா் அருண்காா்த்திக், தலைவா் ஆா்.பி.கதிா்வேல், செயலாளா் காா்த்திக், பொருளாளா் டி.கே.பொன்னுவேல், நவரசம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி பொருளாளா் பழனிசாமி உள்ளிட்டோா் பாராட்டினா்.