தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நவம்பா் 3இல் ஆட்சிமொழிப் பயிலரங்கம்
By DIN | Published On : 27th October 2022 12:00 AM | Last Updated : 27th October 2022 12:00 AM | அ+அ அ- |

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலா்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் நவம்பா் 3 மற்றும் 4ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில் மாவட்டம்தோறும் உள்ள அனைத்து துறை அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு பயிலரங்கம் கருத்தரங்கம் நம்பவா் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
இப்பயிலரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை உயா் அதிகாரிகள் கலந்து கொண்டு பயிற்சியளிக்க உள்ளனா். இப்பயிலரங்கில் ஒவ்வொரு அலுவலகத்தில் இருந்தும் கண்காணிப்பாளா் நிலையில் ஒருவரும், உதவியாளா் அல்லது இளநிலை உதவியாளா் நிலையில் ஒருவரும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.