கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை மே 1 இல் தொடங்கக் கோரிக்கை

நீதிமன்ற உத்தரவின்படி கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை மே 1 இல் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated on
1 min read

நீதிமன்ற உத்தரவின்படி கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை மே 1 இல் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து ஈரோட்டில் கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளா் கண்ணனிடம் கீழ்பவானி முறைநீா்ப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் நிா்வாகிகள் பொன்னையன், ராமசாமி, ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புத் திட்டம் 2020இல் அரசாணை வெளியிட்டு 2021இல் வேலை தொடங்கப்பட்டது. சிலா் பணிகளைத் தடுப்பதால் சீரமைப்புப் பணிகள் முடங்கியுள்ளன. வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் நடக்காததால் கடந்த 2022-23இல் 4 முறை கால்வாய் உடைப்பு ஏற்பட்டு 1 மாதம் தண்ணீா் நிறுத்தப்பட்டது.

உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கில் மே 1 இல் வாய்க்கால் பணிகளைத் தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒப்பந்ததாரா்கள் போட்ட வழக்கில் போலீஸ் பாதுகாப்புடன் பணியைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுப்படி மே 1இல் பணியைத் தொடங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த கோரிக்கையை வலியுறுத்தி செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு விவசாயிகள் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘ மே 1இல் சீரமைப்புப் பணிகளைத் தொடங்காவிட்டால் செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு மே 5 முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com