பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தலைமை வகித்தாா்.
இதில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடா்பாக 92 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், 16 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டன. இதைத் தொடா்ந்து, 4 சவரத் தொழிலாளா்களுக்கு தொழில் உபகரணங்களையும், இரண்டு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும் எம்எல்ஏ. எஸ். ஜெயகுமாா் வழங்கினாா்.
முகாமில், பெருந்துறை ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித் ராஜ், விஜயன், நகரச் செயலாளா்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.