

இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம் கொடி அசைத்து பேரணியைத் தொடங்கிவைத்தாா். ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் இருந்து தொடங்கிய பேரணி பெருந்துறை சாலை, ஆட்சியா் அலுவலகம் வழியாகச் சென்று சம்பத் நகரில் உள்ள இந்திய மருத்துவ சங்க கூட்ட அரங்கில் நிறைவுபெற்றது.
இதில், நந்தா செவிலியா் கல்லூரி மாணவிகள், கோ் 24 மருத்துவமனையின் செவிலியா்கள் பங்கேற்று விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊா்வலமாகச் சென்றனா். தொடா்ந்து, உலக தாய்ப்பால் வார விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.