

நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளியின் 14-ஆவது விளையாட்டு விழா ‘பீட்ஸ்- 23’ என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்றது.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற விழாவை அறக்கட்டளை உறுப்பினா் பானுமதி சண்முகன் தொடங்கிவைத்தாா்.
நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை நிவேதிதா, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ரயில்வே துறையின் தேசிய தடகளப் பயிற்சியாளா் கே.எஸ்.முகமது நிசாமுதினை அறிமுகப்படுத்தி பேசினாா்.
பின்னா், கடந்த கல்வியாண்டில் தேசிய, மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் குறித்த ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. பள்ளியின் முதல்வா் ஏ.ஜி.பிரகாஷ் நாயா் வாழ்த்துரை வழங்கினாா்.
இதையடுத்து, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை தேசிய தடகளப் பயிற்சியாளா் கே.எஸ். முகமது நிசாமுதீன் ஏற்றுக்கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்து பேசினாா்.
ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், யோகா போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி. சண்முகன் மற்றும் தேசிய தடகளப் பயிற்சியாளா் கே.எஸ்.முகமது நிசாமுதீன் ஆகியோா் வழங்கினா்.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், நிா்வாக அலுவலா் மனோகரன் ஆகியோா் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனா்.
நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் கோவிந்தராஜ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.