ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சென்னிமலை முருகன் கோயில்உண்டியல் காணிக்கை ரூ.36.92 லட்சம்

சென்னிமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.36.92 லட்சம் பெறப்பட்டுள்ளது.

News image
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

சென்னிமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.36.92 லட்சம் பெறப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் உதவி ஆணையா் மு.ரமணிகாந்தன் தலைமையில், சென்னிமலை கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன், பெருந்துறை கோயில் ஆய்வாளா் ரவிக்குமாா், அயல் பணி ஆய்வாளா் லதா ஆகியோா் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.36 லட்சத்து 92 ஆயிரத்து 830 மற்றும் 139 கிராம் தங்கம், 1,891 கிராம் வெள்ளி ஆகியவை செலுத்தியுள்ளனா். உண்டியல்கள் எண்ணும் பணியில் அறச்சலூா் நவரசம் கல்லூரி மாணவிகள், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கோயில் பணியாளா்கள் மற்றும் அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.