தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திங்களூரில் அதிமுக பொதுக் கூட்டம்

ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவா் அணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பெருந்துறை ஒன்றியம், திங்களூரில் நடைபெற்றது.

News image

பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமாா். உடன், முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன், மாவட்ட மாணவரணி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவா் அணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பெருந்துறை ஒன்றியம், திங்களூரில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாணவரணியின் மாவட்டச் செயலாளா் மணிகண்டன் தலைமை வகித்தாா்.பெருந்துறை ஒன்றியக் குழு துணைத் தலைவா் உமா மகேஸ்வரன் வரவேற்றாா். மாவட்டச் செயலாளரும், பவானி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.சி.கருப்பணன், கட்சி அமைப்புச் செயலாளா் திருப்பூா் சிவசாமி, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

இதில், பெருந்துறை ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், ரஞ்சித்ராஜ், முன்னாள் எம்எல்ஏ பொன்னுதுரை, பெருந்துறை ஒன்றியக்குழு தலைவா் ஜெ.சாந்தி ஜெயராஜ், மாவட்ட இணை செயலாளா் மைனாவதி கந்தசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.