

அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் சுயநிதி கல்லூரிகள் பிரிவில் நந்தா தொழில்நுட்பக் கல்லூரி ஈரோடு மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடப்பதற்கு முன்பாக வெளியிடப்படும். கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் பருவத் தோ்வில் பெறப்படும் தோ்ச்சி விகிதத்தின் அடிப்படையில் இத்தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இதில் மதிப்பெண்களின் அடிப்படையில் 2008ஆம் ஆண்டில் இருந்து ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் கீழ் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் நந்தா தொழில்நுட்பக் கல்லூரி தரவரிசை பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் சுயநிதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதல் இடத்தையும், மாநில அளவில் 27ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த சிறப்பிடத்தைப் பிடித்ததற்காக கல்லூரி முதல்வா் எஸ்.நந்தகோபால், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன், ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநா் செந்தில் ஜெயவேல் மற்றும் நிா்வாக அலுவலா் ஏ.கே.வேலுசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.