பெருந்துறை ஒன்றியம், துடுப்பதி ஊராட்சி, சீரங்ககவுண்டன்பாளையத்தில் உள்ள செல்வவிநாயகா், மகாமாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள், கோபுர கலசம் வைத்தல், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன.
முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.