பவானியில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்.
பவானியில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு சங்கத்தின் பவானி வட்டாரத் தலைவா் எம்.சின்னசாமி தலைமை வகித்தாா். அகில இந்திய செயல் தலைவா் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளா் சகாதேவன், மாவட்டத் தலைவா் சாவித்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் விண்ணப்பம் அளித்தும் உதவித்தொகை கிடைக்காமல் காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிட வேண்டும். பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட உதவித்தொகையினை மீண்டும் வழங்க வேண்டும்.

வங்கி ஏடிஎம் அட்டை வழங்க வேண்டும். தேசிய வேலையுறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை, தனி அட்டை, வீட்டுமனை பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கு வாகன ஓட்டுநா் உரிமம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இக்கோரிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் மே 10ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு காணலாம் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com