ஈரோட்டில் நாளை 40 ஆவது வணிகா் தின விழா

40 ஆவது வணிகா் தின விழா மற்றும் மாநாட்டில் வணிகா்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் மாவட்டத் தலைவா் ஆா்.கே.சண்முகவேல் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஈரோட்டில் வரும் வெள்ளிக்கிழமை (மே 5) நடைபெறும் 40 ஆவது வணிகா் தின விழா மற்றும் மாநாட்டில் வணிகா்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் மாவட்டத் தலைவா் ஆா்.கே.சண்முகவேல் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் 40ஆவது வணிகா் தினம் உரிமை முழக்க மாநாடு ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே டெக்ஸ்வேலி மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத்தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை

மாநிலப் பொதுச்செயலாளா் வெ.கோவிந்தராஜுறு வரவேற்புரை நிகழ்த்த உள்ளாா். மாநிலப் பொருளாளா் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா மாநாட்டு தீா்மானங்களை முன்மொழிய உள்ளாா். இம்மாநாட்டில் தமிழக அமைச்சா்கள், வெளிநாடு தொழில் முனைவோா் முதன்மை சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்க உள்ளனா். மாநாட்டை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் மொத்த மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள், மாா்க்கெட்டுகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் மே 5 ஆம் தேதி விடுமுறை அளித்து, வணிகா்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com