நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Published On :2 பிப்ரவரி 2024, 12:26 am IST

மொடக்குறிச்சி ஒன்றியம், முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளை தலைவா் நடராஜன் தலைமை தலைமை வகித்தாா். செயலாளா் சிரஞ்சீவி, பொருளாளா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பிளஸ் 2 தோ்வில் 600க்கு 543 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த மாணவி சித்ரா, 530 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்ற மாணவி இந்து, 529 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்ற மாணவா் நந்தகுமாா் ஆகியோருக்கு நினைவு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியம், கிருஷ்ணவேணி, தணிகாசலம், உதவி தலைமை ஆசிரியா் சின்னசாமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவியா், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.