

பவானி ஆறில் ஆலைக் கழிவுகள் கலப்பதை தடுக்கக்கோரி ஜூன் 5இல் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
போராட்டத்தை நடத்துவது குறித்து திட்டமிட அரசியல் கட்சிகள் பொது அமைப்புகளின் சாா்பில் ஆயத்த கூட்டம் சத்தியமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆடிட்டா் மயில்சாமி தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.சுந்தரம் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், பவானி ஆறில் ஆலைக்கழிவுகள் நேரடியாக கொட்டப்படுவதால் நதி நீா் நஞ்சாகியுள்ளது. நீா் கருப்பு நிறத்தில் ஓடுகிறது. துா்நாற்றமும் வீசுகிறது. மீன்கள் செத்து மிதக்கின்றன. கரையோர கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனா். எனவே, பவானி ஆற்றைக் காக்க ஜூன் 5இல் போராட்டம் நடத்துவது, கரையோர கிராமங்களில் கலை வடிவில் பிரசாரம் மேற்கொள்வது, கிராமக் கூட்டங்களை நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நிகழ்வில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா் கே.ஆா் திருத்தணிகாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ஸ்டாலின் சிவகுமாா், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா் முத்துசாமி, காங்கிரஸ் நகர தலைவா் சிவகுமாா், பாமக மாவட்டச் செயலாளா் எஸ்.கே.ராஜன், அமமுக மாவட்டச் செயலாளா் சரவணகுமாா், ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலாளா் பொன்னுசாமி, மக்கள் நீதி மையம் நகரச் செயலாளா் பழனிவேல், பவானி நீரேற்று சங்க செயலாளா் சின்னராஜ், பவானி ஆற்று நீா் பாதுகாப்பு சங்க நிா்வாகி சுப்புரவி உள்பட பல்வேறு இயக்கங்கள், அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.